உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் அப்துல் கலாமுக்கு மோட்ச தீபம்!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் அப்துல் கலாமுக்கு மோட்ச தீபம்!

ராமேஸ்வரம்: அப்துல் கலாம் ஆன்மா சந்தி அடைய ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நிர்வாகம் சார்பில் நேற்று மாலை மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. அப்துல் கலாம் உடல் நேற்று மதியம் நல்லடக்கம் செய்யப்பட்ட பின் மாலை 5:30 மணிக்கு ராமேஸ்வரம் கோயிலில் ஏராளமானோர் பிரார்த்தனை செய்தனர். அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டி கோயிலின் 4 வாசல்களில் மோட்ச தீபத்தை கோயில் குருக்கம் விஜய ஆனந்த், கணபதி ராமன் ஏற்றினார். அதை இணை ஆணையர் செல்வராஜ், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், கண்காணிப்பாளர் கக்காரின் ராஜாங்கம், பேஷ்கார் அண்ணாதுரை ,கமல நாதன், பா.ஜ. தேசிய பொதுக்குழு உறுப்பினர் முரளீதரன், யாத்திரை பணியாளர் சங்க தலைவர் மகேந்திரன் உள்ளிட்டோர் பிரார்த்தனை செய்தனர். ஜனாதிபதி பிரதமர், முதல்வர் பதவியில் இருந்து மறைந்த தலைவர்களுக்கு மட்டுமே இக்கோயிலில் மோட்சம் தீபம் ஏற்றப்படுவது வழக்கம் , நேற்று அப்துல் கலாமுக்கு ஏராளமானோர் திரண்டு மோட்ச தீபரம் ஏற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !