ஒட்டநத்தம் ஸ்ரீவெங்கிடாசலபெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா
தூத்துக்குடி : ஓட்டபிடாரம் தாலுகாவில் உள்ள ஒட்டநத்தம் ஸ்ரீவெங்கிடாசலபெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது.ஓட்டப்பிடாரம் தாலுகாவில் உள்ள ஒட்டநத்தம் வெங்கிடாசலபெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 7ம் தேதி துவங்கியது. அன்று மாலை விக்னேஷ்வர பூஜையும், கணபதிஹோமமும் நடந்தது. அதைத்தொடர்ந்து 8ம் தேதி காலை மகாலட்சுமி ஹோமம், மற்றும் 2ம்கால யாகசாலை பூஜையம், மாலை 3ம் காலஹோமமும் நடந்தது, 9ம் தேதிகாலை நவக்கிரஹக ஹோமமம், ஆஞ்சநேயர் ஹோமம், கருடாழ்வார், ஆஞ்சநேயர் சக்கரத்தாழ்வார், நரசிம்மர் பிரதிஷ்டை மற்றும் 4ம் கால ஹோமமும் நடந்தது. அதைத்தொடர்ந்து சுதர்சன ஹோமும், 5ம் கால ஹோமமும் நடந்தது. 10ம் தேதிகாலை 6 மணிக்கு சர்வசாந்திஹோமம், மகாலட்சுமி ஹோமும், 6ம் கால ஹோமமும் நடந்தது. அதைத்தொடர்ந்து கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அன்று இரவு கருட சேவை நடந்தது.முன்னதாக மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாகமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.