குருநாதஸ்வாமி கோவில் முதல் வன பூஜை!
அந்தியூர்: அந்தியூர், புதுப்பாளையம், குருநாத ஸ்வாமி கோவில் ஆடி தேர்திருவிழா சிறப்பாக நடந்து வருகிறது. கடந்த, 22ம் தேதி பூச்சாட்டுதலு டன் விழா துவங்கி, 29ம் தேதி வனத்தில் கொடியேற்றினர். நேற்று முதல் வன பூஜை நடந்தது. நேற்று காலை, புதுப்பாளையம் மடப்பள்ளியில் குரு நாத ஸ்வாமி, பெருமாள் ஸ்வாமி, காமாட்சியம்ம னுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின், மூன்று தெய்வங்களின் உற்சவர் சிலைகள் அலங்கரிக்கப் பட்டு, சிறிய தேரில் பூஜித்து, பக்தர்கள் தோள் மீது, மேள, தாளங்கள் முழங்க அரோகரா கோஷத்துடன், வனக்கோவிலுக்கு சுமந்து சென்றனர். காமாட்சிம்மன் தேர் முன் சென்றது. தேரின் முன், பக்தர்கள் படுத்துக் கொண்டனர். தேரை தூக்கி வந்தவர்கள், அந்த பக்தர்களை தாண்டி சென்றனர். இதனால், ஸ்வாமியே, தங்களை தாண்டி சென்றதாக ஐதீகம். வனக்கோவிலில், ஆடு, கோழி பலி கொடுத்து, பொங்கல் வைத்து படைத்து வழிபட்டனர். மீண்டும் தேர்கள், இன்று அதிகாலை, புதுப்பாளையம் மடப்பள்ளி வந்து சேரும். வரும், 12 முதல், 15ம் தேதி வரை குதிரை மற்றும் மாட்டு சந்தை நடக்கிறது.