உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேட்டுவைலாமூர் கோவில் தேரோட்டம்!

மேட்டுவைலாமூர் கோவில் தேரோட்டம்!

அவலூர்பேட்டை:மேட்டுவைலாமூர் மருதி அம்மன் கோவிலில் திருத்தேர் உற்சவம் நடந்தது.மேல்மலையனூர் ஒன்றியம், மேல்வைலாமூர் ஊராட்சி மேட்டுவைலாமூர் கிராமத்திலுள்ள மருதி அம்மன் கோவிலில் ஆடிமாத திருவிழா நடந்தது.

இதையொட்டி கடந்த 21ம் தேதி காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை மற்றும் மகா கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது.மாலையில் 108 பால்குட ஊர்வலமும், 29ம் தேதி அம்மன் ஊஞ்சல் உற்சவமும், நேற்று முன்தினம் மஞ்சள் நீராட்டு விழாவும், இரவு திருக்கல்யாணமும் நடந்தது.நேற்று பிற்பகலில் திருத்தேர் வடம் பிடித்தல் விழா நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன், பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !