உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அமைச்சார் அம்மனுக்கு பால்குடம் அபிஷேகம்!

அமைச்சார் அம்மனுக்கு பால்குடம் அபிஷேகம்!

விழுப்புரம்:மணலூர்பேட்டை அமைச்சார் அம்மன் கோவிலில் ஆடி மாதத்தை யொட்டி பக்தர்கள் 9ம் ஆண்டு பால்குடம் அபிஷேகம் செய்தனர்.திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை பகுதியில் அமைந்துள்ள அமைச்சார் அம்மன் கோவிலில் 9ம் ஆண்டு பால்குட அபிஷேகம்
நடந்தது.

கடந்த 31ம் தேதி காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, 10:00 மணிக்கு
பக்தர்கள் பால் குடங்களை ஊர்வலமாக கொண்டு சென்று, அமைச்சார் அம்மனுக்கு அபிஷேகம்
செய்யப்பட்டது.தொடர்ந்து மகா தீபாராதனை, பக்தர்களுக்கு அன்னதானமும், இரவு அம்மன்
வீதியுலா நிகழ்ச்சியும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !