உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூரம் சாமாத்தம்மன் கோவில் ஆடி திருவிழா கோலாகலம்

கூரம் சாமாத்தம்மன் கோவில் ஆடி திருவிழா கோலாகலம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த, கூரம் பகுதி சாமாத்தம்மன் கோவிலில், ஆடித் திருவிழா, கோலாகலமாக நேற்று துவங்கியது.கூரம் கிராம காவல் தெய்வமாக, சாமாத்தம்மன் விளங்கி வருகிறாள். இக்கோவில், 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஆண்டுதோறும் ஆடி மாதம், இக்கோவில் திருவிழா நடப்பது வழக்கம். பெண்கள், நேற்று மாலை பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். இரவு, பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இத்திருவிழாவின் போது அருகில் உள்ள சிறுணை, வதியூர், முட்டவாக்கம், ஆரியபெரும்பாக்கம் பேன்ற பகுதிகளில் இருந்து வந்த மக்கள், கலந்து கொள்வார்கள். இன்று காலை, சாமாத்தம்மன் கோவிலில் இருந்து கரகம் எடுத்து மாரியம்மன் கோவில் வரை திருக்களை சுற்றி, ஊர்வலமாக எடுத்து செல்லப்படும்.நாளை மாலை, 5:00 மணியளவில், பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற அலகு குத்தி, கோவிலில் இருந்து ஊர்வலமாக செல்வார்கள். அன்று இரவு, 9:00 மணியளவில், அப்பகுதியில் உள்ள மாரியம்மன், மலர் அலங்காரத்தில் தெருக்களை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !