/
கோயில்கள் செய்திகள் / சேத்தியாத்தோப்பு மாரியம்மன் ஆடித் திருவிழாவில் காவடி எடுத்து நேர்த்திக் கடன்!
சேத்தியாத்தோப்பு மாரியம்மன் ஆடித் திருவிழாவில் காவடி எடுத்து நேர்த்திக் கடன்!
ADDED :3712 days ago
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள மகா முத்துமாரியம்மன் கோவில் ஆடித் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் செடல் காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். இக்கோவிலில் ஆடித் திருவிழா கடந்த 9ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்து வருகிறது. தொடர்ந்து கடந்த 11ம் தேதி வெள்ளாற்று ராஜன் வாய்க்கால் அருகே உள்ள மேட்டுத்தெரு முருகன் கோவிலிருந்து பெண்கள் பால்குடம் எடுத்தும், ஏராளமான ஆண்கள் அலகு குத்தி, காவடி எடுத்து கோவிலை வந்தடைந் தனர். அங்கு சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.