வீரமாகாளியம்மன் கோவில் பூச்சொரிதல் கோலாகலம்
ADDED :5195 days ago
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோவில் ஆடி ப்பெருந்திருவிழாவை முன்னிட்டு பூச்சொரித ல் விழா நடந்தது. விழாவை முன்னிட்டு திருக் கோவில் நிர்வாகத்தின் சார்பில் அம்மனுக்கு சிற ப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தது. மாலை ஆறு மணி முதல் அறந்தாங்கி நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்கள், பல்லக்குகள் மற்றும் தட்டுகளில் விதவிதமான பூக்களை பவனியாக எடுத்துவந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். இரவு ஏழு மணிக்கு துவங்கிய பூச்சொரிதல் நேற்று அதிகாலை வரை விடிய விடிய நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனர். ஆடிப்பெருந்திருவிழா 26ம் தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் ஆரம்பமாகி தொடர்ந்து 20 நாட்கள் நடக்கிறது.