உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வந்தவாசியில் மழை வேண்டி 10,008 விளக்கு பூஜை!

வந்தவாசியில் மழை வேண்டி 10,008 விளக்கு பூஜை!

திருவண்ணாமலை: வந்தவாசியில் மழை வேண்டி, 10,008 விளக்கு பூஜை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி டவுனில் புகழ்பெற்ற, மஹா காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு மழை வேண்டி, 10,008 விளக்கு பூஜை நடந்தது. இதை முன்னிட்டு காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது, இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை வழிபட்டு, மழை வேண்டி விளக்கேற்றி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !