உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பச்சைவாழியம்மனுக்கு 1008 குட பாலாபிஷேகம்!

பச்சைவாழியம்மனுக்கு 1008 குட பாலாபிஷேகம்!

கடலூர்: கடலூர் முதுநகர் அடுத்த பிள்ளையார்மேடு பச்சைவாழியம்மன் கோவிலில் 1008 பால்குட அபிஷேகம் நடந்தது. கடலூர் முதுநகர் அடுத்த பிள்ளையார்மேடு பச்சைவாழியம்மன் கோவிலில் நேற்று 1008 பால்குட அபிஷேகம் மற்றும் லலிதா சகஸ்ரநாம பூஜை நடந்தது. அதனையொட்டி காலை 8:00 மணிக்கு அனுக்ஞை, வினாயகர் பூஜை, புண்யாகம், மூலமந்திர ேஹாம மகா மந்திரம், ஸ்ரீலலித சகஸ்ரநாம ேஹாமம், பட்டு புடவை அஸ்திரா ேஹாமம், பூர்ணாஹீதி, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து காலை 11:00 மணிக்கு பக்தர்கள் 1008 பல்குடங்களை சுமந்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்த னர். பின்னர் அம்மனுக்கு 1008 பால்குட அபிஷேகம், மகாதீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !