புதுச்சேரி முத்துமாரியம்மன் கோவில் செடல் உற்சவம்!
ADDED :3726 days ago
புதுச்சேரி: கொட்டுப்பாளையம், சாலை முத்துமாரியம்மன் கோவில் செடல் உற்சவம் நடந்தது. லாஸ்பேட்டை, கொட்டுப்பாளையத்தில் உள்ள சாலை முத்துமாரியம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா, கடந்த 20ம் தேதி இரவு 7:00 மணிக்கு, கொடியேற்றத்துடன் துவங்கியது. இதைதொடர்ந்து, செடல் உற்சவமும், மின் அலங்காரத்தில் விநாயகர், முருகர், அம்மன் வீதியுலாவும் நடந்தது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், ஊர் மக்கள் செய்திருந்தனர்.