உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூளாங்குறிச்சி அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

சூளாங்குறிச்சி அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

ரிஷிவந்தியம் : சூளாங்குறிச்சி அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நாளை (27)ம் தேதி நடக்கிறது.ரிஷிவந்தியம் அடுத்த சூளாங்குறிச்சி கிராமத்தில், 30 ஆண்டுகள் பழமைவாய்ந்த அய்யனார் கோவில் இருந்த இடத்தில், புதிதாக கோவில் கட்டப்பட்டது. இக்கோவிலில், நாளை (27ம் தேதி) கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி இன்று கணபதி ஹோமத்துடன் பூஜைகள் துவங்கிறது. தொடர்ந்து மாலை 3:00 மணிக்கு சிலைகள் கரிக்கோலம் வலம் வருதல், மாலை 5:00 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, பார்த்தசாரதி ஹோமம் நடக்கிறது. நாளை காலை இரண்டாம் கால பூஜை துவங்கி 9:30 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராமப் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !