உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் கருமாரியம்மன் கோவில் திருவிழா

காஞ்சிபுரம் கருமாரியம்மன் கோவில் திருவிழா

காஞ்சிபுரம்: திருக்காலிமேடு பகுதியில் உள்ள தேவி கருமாரியம்மன் கோவிலில், 31ம் ஆண்டு ஆடி திருவிழா நேற்று நடைபெற்றது. திருக்காலிமேடு காமராஜர் தெருவில் அமைந்துள்ள தேவி கருமாரியம்மன் கோவிலில், ஆடி திருவிழா, ஆண்டு தோறும் நடைபெறும். இந்த ஆண்டு, 31ம் ஆண்டு திருவிழா, நேற்று முன்தினம் காலை, 7:00 மணிக்கு, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று காலை, 10:00 மணியளவில் மேளதாளத்துடன் கும்பம் வீதியுலா நடைபெற்றது. பகல், 12:00 மணியளவில் கோவிலில் கூழ்வார்த்தலும், இரவு, 10:00 மணியளவில் கும்பம் இடுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !