உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவி.,வடபத்ரசயனர் சன்னதியில் பவித்ர விழா துவக்கம்!

ஸ்ரீவி.,வடபத்ரசயனர் சன்னதியில் பவித்ர விழா துவக்கம்!

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுடன் இணைந்த வடபத்ரசயனர் சன்னதியில் பவித்ர உற்சவ விழா நேற்று துவங்கியது. வேத பிரான்பட்டர் அனந்த ராமகிருஷ்ணன் இல்லத்திலிருந்து மஞ்சள் நூல் மாலைகள், பூஜை பொருட்கள் மரியாதை செய்து, வடபத்ரசயனர் சன்னதிக்கு  அழைத்து வரபட்டது. அங்கு பெரியபெருமாள்,பூமாதேவி, ஸ்ரீதேவி ஆகியோருக்கு கலச பூஜை செய்யபட்டு சிறப்பு அலங்காரம் செய்து  தீபாராதனை நடந்தது. அதன்பின் ஆண்டாள்-ரெங்கமன்னார், பெரியாழ்வார், பெரியபெருமாள் மற்றும் அனைத்து பெருமாள்களுக்கும்  மஞ்சள்நூல் மாலையணிவித்து, சுதர்சனபட்டர், வெங்கடேசபட்டர் தலைமையிலான பட்டர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். திரளான பக்தர்கள்  பங்கேற்றனர். தக்கார் ரவிசந்திரன், செயல்அலுவலர் ராமராஜா தலைமையிலான கோயில் அலுவலர்கள் ஏற்பாடுகளை செய்தனர். நேற்று முதல் ஏழு  நாட்கள் விழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !