சோழவந்தான் மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் கோயிலில் சஷ்டி பூஜை!
ADDED :3720 days ago
மண்ணாடிமங்கலம்: சோழவந்தான் மண்ணாடிமங்கலம் மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் சுவாமி கோயிலில் சஷ்டி பூஜை நடந்தது. இக்கோயிலில் வள்ளி, தெய்வானை சுப்பிரமணிய சுவாமி சன்னதி உள்ளது. இக்கோயிலில் தினமும் மாலை பக்தர்கள் சார்பில் சஷ்டி நோன்பு, பூஜைகள் நடக்கிறது. சிவாச்சாரியார் கணேசன் பூஜை செய்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.