உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருதுநகர் சொக்கநாதசுவாமி கோயிலில் ஆவணி தேரோட்டம்!

விருதுநகர் சொக்கநாதசுவாமி கோயிலில் ஆவணி தேரோட்டம்!

விருதுநகர்: விருதுநகர் சொக்கநாதசுவாமி கோயிலில் ஆவணி தேரோட்டம் நேற்று நடந்தது. ஆக.,19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய இக்கோயில் விழாவில் தினமும் சுவாமி, அம்பாள் ,ரிஷபம், அன்னம், பூதம், குதிரை, சிங்கம், காமதேனு, யானை, புஷ்ப பல்லக்கு, வாகனங்களில் வீதி உலா நடந்தது.சுவாமி, வீதி உலா , 26ல் திருக்கல்யாணம் நடந்தது. நேற்று காலை 10 மணிக்கு சுவாமி,அம்பாள் தேரில் எழுந்தருள தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தக்கார் தேவராஜ், நிர்வாக அதிகாரி சுவர்ணாம்பாள், பிரமோற்சவ கட்டளை நிர்வாக அறங்காவலர் ரமேஷ்குமார், கோயில் ஊழியர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !