உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருஷ்டி தோஷம் நீங்க என்ன பரிகாரம் செய்யலாம்?

திருஷ்டி தோஷம் நீங்க என்ன பரிகாரம் செய்யலாம்?

கண்திருஷ்டி விநாயகர் படத்தை வீட்டின் முன்பகுதியில் வைக்கலாம். நுழைவு வாசலில் வலம்புரிச் சங்கை பதிக்கலாம். ஞாயிறு அன்று சூடம் சுற்றி  ஏற்றி வைக்க திருஷ்டி விரைவில் அகலும். ஞாயிறன்று கண்ணூறு (திருஷ்டி) கழிக்க நன்று என்று பஞ்சாங்கத்தில் சொல்லியுள்ளனர். பூசணிக்காய்  உடைப்பது, தேங்காயை கண்ட இடங்களில் விடலை போடுவது போன்று செய்யாதீர்கள். இது போக்குவரத்துக்கு இடையூறு செய்யும். இதை விட  எளிய வழி.. இஷ்ட தெய்வத்தின் பெயரை எப்போதும் சொல்லிக் கொண்டிருந்தால் திருஷ்டி பறந்தோடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !