ஆறுமுகநேரி சுப்பிரமணியசுவாமி கோயிலில் திருஏடு வாசிப்பு விழா
ADDED :5223 days ago
ஆறுமுகநேரி : ஆறுமுகநேரி சுப்பிரமணியசுவாமி கோயில் தெருவில் உள்ள அய்யா தாங்கலில் அகில திரட்டு அம்மானை திருஏடு வாசிப்பு 10 நாட்கள் நடந்தது.ஆறுமுகநேரி சுப்பிரமணியசுவாமி கோயில் தெருவில் அமைந்துள்ள அய்யா தாங்கலில் கடந்த 8ம் தேதி முதல் 17ம் தேதி வரை அகில திரட்டு அம்மானை திருஏடு வாசிப்பு விழா நடந்தது. தினமும் இரவு சுவாமிதோப்பு சங்கரபாண்டியன் குழுவினர் திருஏடு வாசித்து விளக்கம் அளித்தனர். 8ம் தினத்தன்று இரவு மதியம் உச்சிபடிப்பு, திருக்கல்யாண வாசிப்பு நடந்து. மாலையில் முளைப்பாரி ஏந்தி பெண்கள் ஊர்வலமாக சென்றனர். இதனைத் தொடர்ந்து திருவிளக்கு பூஜையும், திருஏடு வாசிப்பும் நடந்தது. அப்போது பக்தர்கள் கொதிக்கும் எண்ணெய்யில் அப்பம் சுட்டு தரிசனம் செய்தனர். 10ம் திருநாளன்று மதியம் உச்சிபடிப்பும், இரவு பட்டாபிஷேக வாசிப்பும் நடந்தது.