திண்டிவனம் பட்டாபிராமர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்!
ADDED :3734 days ago
திண்டிவனம்: திண்டிவனம் ஜக்காம்பேட்டை ஸ்ரீ பட்டாபிராமர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. திண்டிவனம் அடுத்த ஜக்காம்பேட்டையில் உள்ள ஸ்ரீ பட்டாபிராமர் கோவிலில், கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இக்கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு தினத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் சிறப்பு அபிஷேகம் நடந்தது. கோவிலில் உள்ள ராமர், லட்சுமணர், சீதை மற்றும் உற்சவர் சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நகர்மன்ற கவுன்சிலர் விஜயக்குமார் தலைமையிலான விழாக்குழுவினர் செய்திருந்தனர்.