விநாயகர் கோவிலில் மாங்கல்ய பிரசாதம்!
ADDED :3756 days ago
பெரிய கோவில்களில் அம்பாள், சுவாமிக்கு திருக்கல்யாணம் நடத்தும் போது திருமாங்கல்யம், குங்குமம், மஞ்சள் ஆகிய மங்கலப் பொருட்களை பிரசாதமாக கொடுப்பார்கள். மதுரை அருகே வாடிப்பட்டியிலுள்ள வல்லப கணபதி கோவிலிலும், இதே போல மாங்கல்ய பிரசாதம் தரப்படுகிறது. இந்த விநாயகருக்கு செய்யும் பூஜையின் போது, இப்பொருட்களை வைத்து வழிபடும் வழக்கம் இருக்கிறது. விநாயகர், அம்பிகையில் இருந்து தோன்றியதால் இவரை, சக்தி அம்சமாக கருதி இவ்வாறு செய்கின்றனர். இவர் மங்கலம் தரும் விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.