கமேசாயினி அம்மன்!
ADDED :3680 days ago
திபெத் நாட்டில் விநாயகர் பெண் வடிவத்தில் இருக்கிறார். இவரை டிஸ்-ஆக்ஸ்ப்பாக், பாடாக்போ, பிக்கஸ்பாங் என்ற பெயர்கள் இட்டு அழைக்கின்றனர். புத்தர் சிலை அருகே விநாயகர் சிலையையும் வடித்துள்ளனர். நர்த்தன விநாயகரும் (நடனக்கோலம்) இங்கு இருக்கிறார். விநாயகரை அம்மனாக கருதி கமேசாயினி என்ற பெயரில் வழிபடுகின்றனர். நடன கோலத்தில் உள்ள விநாயகருக்கு மண்டை ஓடு, எலும்பு மாலை, சிந்தாமணி மாலை, அணிவித்து கைகளில் கமண்டலம், மோதகம், கோடரி, திரிசூலம் ஆகியவற்றையும் கொடுத்துள்ளனர். நெற்றியில் பிறை சந்திரன் வடிவத்தில் சந்திர திலகம் இடுகின்றனர். திபெத்தில் உள்ள கோவில்களின் முன் வாசலில் விநாயகரை காவல் தெய்வமாக வைத்துள்ளனர்.