நவநீதகிருஷ்ண சுவாமி கோவில் உறியடி உற்சவம்!
ADDED :3671 days ago
மாமல்லபுரம்: மாமல்லபுரம், நவநீதகிருஷ்ண சுவாமி கோவிலில், உறியடி உற்சவம் நடந்தது. மாமல்லபுரம், ருக்மணி பாமா சமேத நவநீதகிருஷ்ண சுவாமி கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி உற்சவம், கடந்த 5ம் தேதி துவங்கியது. அன்று முதல், நேற்று வரை, சுவாமிக்கு தினமும் மாலையில் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. சுவாமி பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தினமும் இரவில், உபன்யாசம் நடந்தது. உற்சவ கடைசி நாளான நேற்று, காலை 9:00 மணிக்கு, உறியடி கண்ணனுக்கு சிறப்பு திருமஞ்சனம்; பகல் 2:00 மணிக்கு, கோலாட்ட பஜனை; மாலை 5:00 மணிக்கு, வழிபாடு நடந்தது. அதைத் தொடர்ந்து, 6:30 மணிக்கு, பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சூழ நின்று உறியடித்தனர்.