ஆலத்தி அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்!
திருப்புத்தூர் : பட்டமங்கலம் வெள் ளானைப் பெரியவர்என்ற ஆலத்தி அய்யனார் கோயிலில் 19 ஆண்டுக்கு பின் கும்பாபிஷேகம் நடந்தது. செப்டம்பர் 15ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கின. முதல் மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. காலை 7 மணிக்கு 4ம் யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேகம் துவங்கியது. அன்று காலை 8:45 மணிக்கு மகா பூர்ணாகுதியும், காலை 9 மணிக்கு கலசம் புறப்பாடும் நடந்தது. கருடன் வட்டமிட கோபுர கலசத்தில் சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். அதைதொடர்ந்து திருப்பட்டு சாத்துதல் நிகழ்ச்சி நடந்தது. கடந்த 1976 மற்றும் 1996ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடந்தது. அதற்கு பின்,19 ஆண்டு கழித்து கும்பாபிஷேகம் நடந்தது. பட்டமங்கலம் கீழத்தெருவார்கள், நாட்டார், நகரத்தார், காரைக்குடி முத்துவீரப்பசெட்டி கருப்பாத்தான் வகை பங்காளிகள் மற்றும் நகரத்தார் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.