ஆஞ்சநேயர் விநாயகருக்கு அபிஷேகம்!
ADDED :3671 days ago
திருமங்கலம்: திருமங்கலம் பஸ் ஸ்டாண்ட் நுழைவாயில் அருகே அரசமரத்தடியில் பழமையான கோயில் உள்ளது. இங்குள்ள விநாயகரை விபூதி விநாயகர், வெள்ளை விநாயகர் என அழைக்கின்றனர்.எண்ணெய் அபிஷேகம் செய்யப்படாமல், விபூதியால் அபிஷேகம் நடப்பது இக்கோயிலின் சிறப்பு. தவிர, விநாயகர் முகம் ஆஞ்சநேயர் போன்று உள்ளது. பஸ் ஸ்டாண்டிற்கு வந்து செல்லும் மக்கள், இந்த விநாயகரை வழிபட தவறுவதில்லை. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நேற்று, மஞ்சள், பால், எண்ணெய் காப்பு, தேங்காய் பூ என 9 வகை அபிஷேகம், பூஜை நடந்தது.