உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி அமாவாசை கால்நாட்டு வைபவம்!

சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி அமாவாசை கால்நாட்டு வைபவம்!

விக்கிரமசிங்கபுரம் : காரையார் காணிக்குடியிருப்பு சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு நேற்று கோயில் வளாகத்தில் கால்நாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற காரையார் காணிக்குடியிருப்பு சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழா வரும் 30ம் தேதி நடக்கிறது. விழாவை முன்னிட்டு நேற்று கோயில் வளாகத்தில் கால்நாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக கோயிலில் குடி கொண்டிருக்கும் மகாலிங்க சுவாமி, சொரிமுத்து அய்யனார், சங்கிலி பூதத்தார் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரமும், பூஜையும் நடந்தது. இதனை தொடர்ந்து நேற்று காலை சுமார் 11.15 மணியளவில் கோயில் வளாகத்தில் கால்நாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் சிங்கம்பட்டி ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி, கட்டளைமலை எஸ்டேட் வசந்தாராணி, ராஜாவின் நேர்முக உதவியாளர் கிட்டு, கோயில் நிர்வாக அதிகாரி ராமராஜன், கணக்கர் ராட்சமுத்து, தலைமை கணக்கர் செங்கோடி உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !