கோவில் சிலைகள் சேதம்: விழுப்புரத்தில் பரபரப்பு!
ADDED :3722 days ago
விழுப்புரம்: விழுப்புரத்தில் கோவிலில் சிலைகளை மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விழுப்புரம் கிழக்கு ரயில்வே காலனி பகுதியில் கருமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த சில தினங்களுக்கு முன், கும்பாபிஷேகம் நடந்தது. இந்த கோவிலில் உள்ள வீரன் சிலையில் உள்ள ஒரு கை மற்றும் கால், தலை பகுதி மற்றும் அங்கிருந்த சூளம் ஆகியவற்றை நேற்று முன்தினம் இரவு, மர்ம நபர்கள் சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளனர். இதையறிந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை 7:00 மணிக்கு கோவில் திரண்டனர். தகவலறிந்த விழுப்புரம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். கோவில் சிலைகள் மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப் பை ஏற்படுத்தியது.