உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறுபாக்கம் கோவில்களில் கும்பாபிஷேகம்!

சிறுபாக்கம் கோவில்களில் கும்பாபிஷேகம்!

சிறுபாக்கம்: சிறுபாக்கம் பள்ளி கொண்ட வரதராஜ பெருமாள், கமலாம்பிகை சோழீஸ்வரர் கோவில்களில் திருப்பணிகள் முடிந்து நாளை  (24ம் தேதி) கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி, கோவில் வளாகத்தில், நேற்று காலை 10:30 மணியளவில் மகா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம்,  சுதர்சன ஹோமம், நவகிரக ஹோமம், தன பூஜை, சிவ பூஜை, திரவிய ஹோமத்துடன் முதல் கால பூஜை துவங்கியது. ஏராளமானோர் பங்கேற்றனர்.  பகல் 12:00 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட கோபுர கலசத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, கோபுர கலசம் வீதியுலா நடந்தது. இன்று (23ம் தேதி) காலை 9:00 மணிக்கு யாக சாலை பிரவேசம், இரவு 9:00 மணிக்கு மூன்றாம் கால பூஜை, 24ம் தேதி காலை 9:00 மணியளவில் கோபுர கலசத்தில்  புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !