மேலும் செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சாயி கோயிலில் செப்பு தேரோட்டம்
5185 days ago
கொழுக்கட்டைகளை சூறைவிட்டு அய்யனாருக்கு வினோத வழிபாடு
5185 days ago
தஞ்சாவூர்: தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் உண்டியல் எண்ணப்பட்டதில் 6 லட்சம் ரூபாய் இருந்தது. தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் உண்டியல் நேற்று காலை திறக்கப்பட்டது. திருவாரூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் நந்தகோபால், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான உதவி கமிஷனர் ஞானசேகரன் ஆகியோர் தலைமையில் எண்ணப்பட்டது. கோவில் ஆய்வாளர் மனோகரன், கண்காணிப்பாளர் அசோகன், மேற்பார்வையாளர் தனசேகரன் முன்னிலையில் திறக்கப்பட்டது. தஞ்சாவூர் டெக்ஸ்டைல்ஸ் ஊழியர்கள், மகளிர் குழுவினர், கோவில் பணியாளர் கோவில் உண்டியல் எண்ணினர். 6 லட்சத்து 1,555 ரூபாய் ரொக்கம், 265 கிராம் தங்க நகைகள், 475 கிராம் வெள்ளி பொருட்கள், 21 வெளிநாட்டு கரன்சிகள் இருந்தது.
5185 days ago
5185 days ago