குன்றத்தில் மலைமேல் குமரருக்கு அக்.9ல் வேல் எடுக்கும் விழா!
ADDED :3683 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பங்குன்றம் மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் திருவிழா அக். 9ல் நடக்கிறது. அன்றைய தினம் கிராமத்தினர் சார்பில், கோயில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கரத்திலுள்ள வேலுக்கு சிறப்பு அபிஷேகங்கள் பூஜைகள் முடிந்து பல்லக்கில் ரத வீதிகளில் வலம் சென்று, மலைமேலுள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு கொண்டு செல்லப்படும். உச்சிகால பஜையின்போது, அங்குள்ள சுனை தீர்தத்தில் வேலுக்கு அபிஷேகம் முடிந்து, சுப்பிரமணியர் கரத்தில் சேர்ப்பிக்கப்படும். பக்தர்களுக்கு கதம்ப சாதம் வழங்கப்படும். மாலையில் மலை அடிவாரத்திலுள்ள மூலவர் பழனியாண்டவர் கரத்தில் வேல் சேர்ப்பிக்கப்பட்டு அபிஷேகம், பூஜைகள் முடிந்து, இரவு வேல் பூ பல்லக்கில் புறப்பாடாகி மீண்டும் மூலவர் கரத்தில் சேர்ப்பிக்கப்படும்.