ஸ்டாலின் மனைவி துர்கா பழநியில் சுவாமி தரிசனம்!
ADDED :3767 days ago
பழநி: தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் மனைவி துர்கா பழநி மலைக்கோயிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். நமக்குநாமே திட்ட பயண நிகழ்ச்சிக்காக பழநிக்கு ஸ்டாலின் வந்தார். உடன் வந்த அவரது மனைவி துர்கா வின்ச் வழியாக நேற்று காலை 11.30 மணிக்கு மலைக்கோயிலுக்கு சென்றார். அங்கு மூலவர் சன்னதியில் தேங்காய், பழத்துடன் குடும்பத்தினர் பெயரில் அர்ச்சனை செய்து ஞானதண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தார். கோயிலை வலம் வந்த அவர், அதன்பின் வின்ச் வழியாக மலையில் இருந்து இறங்கினார். அவருடன் கட்சிநிர்வாகிகள் சிலர் வந்திருந்தனர்.