புனித மிக்கேல் அதிதூதர் ஆலய விழா நிறைவு
ADDED :3766 days ago
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள செங்குடி புனித மிக்கேல் அதிதூதர் சர்ச் விழா கடந்த 10 நாட்களாக நடந்தன. தினமும் நவநாள் திருப்பலி,நற்கருனை ஆதாரனை நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக தேர்பவனி நடந்தது. நிறைவாக பாதிரியார் சாமுஇதயன் கொடிமரத்தில் இருந்து கொடியிறக்கம் செய்தார். கிராமத்தலைவர் சேவியர்ராஜ், செயலாளர் ஆரோக்கிய மோரீஸ், பொருளாளர் மோரீஸ், உடற்கல்வி ஆசிரியர் சேவியர்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.