லட்சுமி தேவி வசிக்கும் இடங்கள் எவை?
ADDED :3796 days ago
தெய்வங்கள் வசிக்கும் இடங்கள் என்றும் சில இடங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. லட்சுமி அருள்பெற அவர் வசிக்கும் இடங்களுக்குச் சென்று வணங்கி வந்தால் செல்வம் கொழிக்கும் என்று நம்பப்படுகிறது. தானியங்களின் குவியல், கிடைப்பதை பகிர்ந்துண்டு வாழும் மனிதன், நாவடக்கம் உள்ளவர், இனிமையோடும் பண்போடும் வாழும் பண்பாளர், உணவு உண்பதற்கு அதிக நேரம் செலவிடாதவர், பெண்களைத் தெய்வமாய்ப் ÷ பாற்றும் உத்தமர் ஆகியோரிடத்திலும் வெண்ணிற மாடப்புறாக்கள் வாழும் இடம், கலகம், சண்டை போன்றவற்றை அறியாத பெண் வாழும் வீடு ஆகியவற்றிடத்திலும் லட்சுமி நித்ய வாசம் செய்கிறாள் என்று நம்பப்படுகிறது. வெண்மையும் பரிசுத்தமான ஆடைகள், சங்கு, நெல்லிக்காய், தாமரை போன்றவைகளிடத்திலும் லட்சுமி தேவி வசிப்பதாகவும் கருதப்படுகிறது.