மங்கையர்க்கு வளம் சேர்க்கும் மகத்தான விரதங்கள் எவை?
சிவ விரதங்களில் 8 வகையான விரதங்கள் உள்ளன. அவற்றைப் பெண்கள் முறையாகக் கடைப்பிடித்தால், வாழ்க்கையில் உள்ள தடைக்கற்கள் எல்லாம் படிக்கற்களாக மாறும் என்பது முன்னோர் நம்பிக்கை. அனுசுயா தேவி, சாவித்திரி தேவி போன்றவர்கள் விரதங்களின் வாயிலாகவும், வழிபாட்டின் வாயிலாகவும் வாழ்க்கையில் வெற்றிப் பெற்றதைப் புராணங்கள் மூலம் அறிய முடிகிறது.
1. சோமவாரவிரதம் - இது திங்கட்கிழமையில் மேற்கொள்ளும் விரதமாகும்.
2. உமாமகேஸ்வரவிரதம் - இது கார்த்திகைப் பவுர்ணமியன்று கடைபிடிக்க வேண்டிய விரதமாகும்.
3. திருவாதிரை விரதம் - இது மார்கழி மாதத்தில் கடைபிடிக்க வேண்டிய விரதமாகும்.
4. சிவராத்திரி விரதம் - இது மாசி மாதம் வரும் மகா சிவ ராத்திரி அன்று கடைபிடிக்க வேண்டிய விரதமாகும்.
5. திருமணத்தடை அகற்றும் விரதம் - பங்குனி உத்திரத்தன்று மேற்கொள்ள வேண்டிய விரதமாகும்.
6. பாசுபத விரதம் - தைப்பூசத்தன்று இருக்கும் விரதமாகும்.
7. அஷ்டமி விரதம் - பூர்வபட்ச அஷ்டமியில் இருக்கும் விரதமாகும்.
8. கேதார விரதம் - தீபவாளியன்று கடைப்பிடிக்க வேண்டிய விரதமாகும்.