மடவிளாகம் திருவேங்கிட பெருமாள் கோவில் தேர்த்திருவிழா
ADDED :3669 days ago
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் அடுத்த மடவிளாகம் காலனியில் திருவேங்கிட பெருமாள் கோவில் தேர்த் திருவிழா நடந்தது.கண்டாச்சிபுரம் அடுத்த மடவிளாகம் காலனியில் அமைந்துள்ள திருவேங்கிட பெருமாள் கோவில் தேர்த்திருவிழா நடந்தது. இதையொட்டி காலை 6:00 மணியளவில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின்னர் ஸ்ரீதேவி, பூதேவி அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. அதனைத் தொடர்ந்து திருவேங்கிட பெருமாள் தேர் வீதியுலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை தர்மகர்த்தா ராமலிங்கம் செய்திருந்தார்.