இரண்டாவது பிரம்மோற்சவத்திற்கு தயாராகிறது திருமலை!
ADDED :3646 days ago
திருப்பதி: திருமலை திருப்பதியில் நடைபெறும் விழாக்களில் ஒன்பது நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழா மிகவும் விமரிசையானது. வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் இந்த விழா மூன்று வருடத்திற்கு ஒரு முறை வருடத்திற்கு இரண்டு பிரம்மோற்சவம் நடைபெறும் இந்த வருடம் இரண்டு முறை நடைபெறும் வருடமாகும். கடந்த மாதம் முதல் பிரம்மோற்சவம் நடந்து முடிந்த நிலையில் நவராத்திரி பிரம்மோற்சவம் வருகின்ற 14ந்தேதி துவங்கி 22ந்தேதி வரை நடைபெறும்.விழா நாட்களில் காலை மற்றும் இரவில் சுவாமி விதவிதமான வாகனத்தில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
முக்கிய விழா விவரம்:
14/10/2015– பெரிய சேஷ வாகனம்
18/10/2015–கருட வாகன உலா
21/10/2015–தேரோட்டம்
22/10/2015–சக்ரஸ்நானம்