உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவெண்காடர் கோவிலில் ஆயிர கணக்கான பக்தர்கள் u›\Ú®!

திருவெண்காடர் கோவிலில் ஆயிர கணக்கான பக்தர்கள் u›\Ú®!

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், கடையம் ஒன்றியம் தட்சிணபுரி என்கிற பார்பன் குளம்  அருள் மிகு வாடாகலைநாயகி சமேத திருவெண்காடர் திருக்கோவிலில் 10ம் தேதி நடந்த சனி பிரதோஷத்தில் ஆயிர கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். திருநெல்வேலி மாவட்டம், கடையம் ஒன்றியம் தட்சிணபுரி என்கிற பார்பன் குளம்  அருள் மிகு வாடாகலைநாயகி சமேத திருவெண்காடர் திருக்கோவிலி ல் உள்ளது. இங்கு அம்பாள் திருவுருவம் 32 லட்சணங்களும் பொருந்தியிருப்பதுடன், ஆ யக்கலைகள் 64 க்கும் தாயாக விளங்குவதாலும், ஈசன் சந்திர காந்த ல்லால் வடிவமைக்கப்பட் சுயம்பாக இருப்பதாலும், சிவனுக்குரிய அனைத்து வழிபாடுகளும் வெகு விமர்சியாக நடப்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து சிவ பக்தர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

10ம் தேதி சனிபிரதோஷம் என்பதால் இங்கு ஈசன், அம்பாள் மற்றும் நந்திகேசருக்கு சிறப்பு வழிபாடும்,  ஆயிர கணக்கான செண்பகம், மனோரஞ் சிதம் மற்றும் தாமரை மலர்களால் மட்டும் அலங்காரம் செய்தனர். முன்னதாக சிவன், அம்பாள் மற்றும் நந்திகேஸ்வரருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர் உள்ளிட்ட திரவியங்கள் மற்றும் நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிஷே கமும், 10 ஆயிரத்து எட்டு தீப விளக்கேற்றி ஆராதனை செய்தனர்.  அதன் பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் சுற்றுப்ப தியைச் சேர்ந்த ஆயிர கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஈசன், அம்பாள் மற்றும் நந்திகேஸ்வரரை வணங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !