மயிலாடுதுறை ஸ்ரீஅபய ஆஞ்சனேயருக்கு சிறப்பு பூஜை!
ADDED :3655 days ago
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள மங்கைமடத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ அபய ஆஞ்சனேயர் கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு வந்து ஆஞ்சனேயரை சரனடைந்து வழிபட்டால் திருமணம், சத்ரு,சனி தோஷங்கள் நீங்கி சகலநன்மையும் கிடைக்கும் என்பது ஐதீகம். சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் மஹாளய அம்மாவாசையான நேற்று ஆஞ்சநேயருக்கு பால், திரவியப்பொடி, மஞ்சள் பொடி, பன்னீர், தயிர், இளநீர் கொண்டு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து கோயில் அர்ச்சகர் சாரதிபட்டாச்சாரியார் தலைமையிலானோர் ஆஞ்சனேயருக்கு சிறப்பு பூஜைகள் செய்துவைத்தனர். இ தில் திரளான பக்தர்கள் கலந்தகொண்டு தரிசனம் செய்தனர்.