புதுச்சேரி நவராத்திரி விழா!
ADDED :3981 days ago
புதுச்சேரி: வைத்திக்குப்பம் முத்தாலம்மன் கோவிலில், நவராத்திரி விழா நேற்று துவங்கியது.
இதையொட்டி, காலை 9.00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. இரவு 7.00 மணிக்கு கன்னிகா பரமேஸ்வரி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் அருள் பாலித்தார்.நவராத்திரியை முன்னிட்டு, கோவில் வளாகத்தினுள் பொம்மைகள் வைத்து கொலு நடந்தது. பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.