துர்க்கை சன்னிதியில் நவராத்திரி விழா சிறப்பு அலங்காரம்!
ADDED :3757 days ago
கோவை: கோல்டுவின்ஸ், துரைசாமி நகர், சுயம்பு தம்புராயன் கோவில் வளாகத்திலுள்ள துர்க்கை அம்மன் சன்னிதியில், நேற்று நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. நவராத்திரி விழாவின் நான்காவது நாளான நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர்.