கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா
ADDED :3647 days ago
திருக்கோவிலூர்: கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில், நவராத்திரியை முன்னிட்டு, அம்மன் மகாலட்சுமி அலங்காரத்தில் அருள்பாலித்தார். திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், நவராத்திரி விழா நடந்து வருகிறது. விழாவின் ஒரு பகுதியாக நேற்று முன்தினம், மூலவர் பிரகன்நாயகி அம்பிகைக்கு மகா அபிஷேகம், அலங் காரம், தீபாராதனை நடந்தது. மாலை 6:30 மணிக்கு உற்சவர் சிவானந்தவள்ளி அம்பிகை, மகாலட்சுமி அலங்காரத்தில், கொலுமண்டபத்தில் எழுந்தருளினார்.