நெல்லையில் தசரா விழா: 12 அம்மன் சப்பர பவனி!
திருநெல்வேலி: நெல்லையில் நடந்த தசரா விழாவில் நேற்று இரவு சூரசம்ஹாரம் நடந்தது. மைசூருக்கு அடுத்தபடியாக நவராத்திரி விழாவை தசரா விழா என்ற பெயரில் கொண்டாடுவது திருநெல்வேலியில் தான்.
இங்கு தெற்குபஜார், வடக்கு பஜார் பகுதியில் அமைந்துள்ள அம்மன் கோயில்களில் கடந்த 12ம் தேதி முதல் விழாக்கோலம் பூண்டது. ஆயிரத்தம்மன் கோயிலில் கொடியேற்றத்தை தொடர்ந்து ஆயிரத்தம்மன்., உலகம்மன், புதுஅம்மன், முப்பிடாதிஅம்மன், உச்சினிமகாளி அம்மன், பேராத்துச்செல்வி, தூத்துவாரிஅம்மன் என ஆக்ஸ்போர்டு நகரில் சுற்றிச்சுற்றி அமைந்துள்ள 12 அம்மன்கோயில்களில் இருந்தும் அம்மன்கள் சப்பரங்களில் எழுந்தருளினர். நேற்று காலையில் ராமர்கோயில் அருகே அனைத்து சப்பரங்களும் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. அங்கு பொதுமக்கள் அம்மன்களை ஒரு சேர வழிபட்டனர். இரவில் மார்க்கெட் திடலில் அருள்பாலித்தவர்கள், பின்னர் போலீஸ் கண்ட்ரோல் அருகே அமைந்துள்ள திடலில் சூரசம்ஹார நிகழ்வுடன் தசரா விழா நிறைவுற்றது. இதே போல திருநெல்வேலி டவுனிலும் பல்வேறு அம்மன் சப்பரங்கள் எழுந்தருளின.