ஆடவல்லீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED :3961 days ago
முருக்கேரி: முருக்கேரி அடுத்த முன்னூர் கிராமத்தில் உள்ள பிரகன்நாயகி சமேத ஆடவல்லீஸ்வரர் கோவிலில் ஆயுத பூஜை சிறப்பு வழிபாடுகள் நடந்தது. மூலவர் ஆடவல்லீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், பூ அலங்காரம், தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதில் ஏராளமான கிராம பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.