உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோதண்டராமர் கோவில் கும்பாபிஷேகம்

கோதண்டராமர் கோவில் கும்பாபிஷேகம்

மாமல்லபுரம்: பொன்பதர்கூடம் சதுர்புஜ கோதண்டராமர் கோவிலில், நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் நடந்தது. திருக்கழுக்குன்றம் அடுத்த, பொன்பதர்கூடம் கிராமத்தில், இந்து சமய அறநிலையத் துறையின் கீழ், பழமையான சதுர்புஜ கோதண்டராமர் கோவில் உள்ளது. இக்கோவிலில், 32 அடி உயரத்தில் கொடிமரம் அமைக்கப்பட்டு, புதிதாக மண்டபம் கட்டி திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து, 24ம் தேதி மாலை, துவங்கிய யாகசாலை பூஜை, வேத திவ்விய பிரபந்தத்துடன், நேற்று முன்தினம் காலை முடிந்தது. அதன்பின், மூலவர் சன்னிதி விமானத்தில் புனித நீரூற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பிற்பகலில், சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. மாலையில் சுவாமி வீதியுலா சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !