உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / டில்லியில் ஆயிரம் நெய் தீபங்களின் பின்னனியில் திருமலை உற்சவம்!

டில்லியில் ஆயிரம் நெய் தீபங்களின் பின்னனியில் திருமலை உற்சவம்!

டில்லி: திருமலை திருப்பதி சீனிவாசப்பெருமாளின் அருளை உலகம் முழுவதும் பரப்பும் விதத்தில் திருமலையில் நடப்பது போன்ற திருக்கல்யாணம் உள்ளீட்ட வைபவங்களை இந்தியா முழுவதும் கோயில் நிர்வாகம் நடத்திவருகிறது.

இதன் ஒரு கட்டமாக டில்லியில் திருமலை கோவில் போன்ற வடிவமைத்து விசேஷ பூஜைகள் நடத்திவருகின்றனர். திருமலையில் மாடவீதியில் உள்ள சகஸ்ரநாம அலங்கார மண்டபத்தில் ஆயிரம் நெய் விளக்குகள் சுடர்விட்டு பிராகசிக்க அதன் பின்னனியில் உற்சவரான மலையப்பசுவாமி தேவியருடன் ஊஞ்சலில் ஆடும் ஊஞ்சல் உற்சவம் மிகவும் பிரபலமாகும். இந்த ஊஞ்சல் உற்சவத்தை டில்லியில் நடத்தினர். ஆயிரம் நெய் விளக்குகள் ஏற்றப்பட்ட சகஸ்ரநாம மண்டபத்திற்கு யோககுரு ராம்தேவ் உள்ளீட்டோர் மலையப்பசுவாமியை பல்லக்கில் சுமந்து வந்தனர்.பின்னர் தேவியருடன் ஊஞ்சலில் அமர்த்தி சுவாமியை பக்தி பாடல்களால் மகிழ்வித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !