உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலம் முருகன் கோவிலில் சூரசம்ஹார விழா துவங்கியது

மயிலம் முருகன் கோவிலில் சூரசம்ஹார விழா துவங்கியது

மயிலம்: மயிலம் முருகன் கோவில் கந்த சஷ்டி விழா துவங்கியது. மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு மகா தீபாராதனை நடந்தது. பகல் 12:00 மணிக்கு கோவில் வளாகத்திலுள்ள பாலசித்தர், வினாயகர் வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமிக்கு நறுமணப் பொருட்களினால் அபிஷேகம் செய்தனர்.பின்னர் வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமி, தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து 12:30 மணிக்கு நடந்த வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். வீரபாகு, மற்றும் நவ வீரர்கள் மலையடிவாரத்திலுள்ள சுந்தர வினாயகர் கோவிலிருந்து மலைக் கோவிலுக்கு இரவு 7: 20 மணிக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் 7:35 மணிக்கு கோவில் வளாகத்தில் காப்பு கட்டுதலுடன், கந்த சஷ்டி விழா துவங்கியது. வரும் 17ம் தேதி கோவில் வளாகத்தில் சூரசம்ஹாரம் நடக்கிறது. அன்று இரவு 8:00 மணிக்கு முருகப்பெருமான் கோவில் மண்டபத்தில் வேல் வாங்கும் நிகழ்ச்சியும், தொடர்ந்து சூரசம்ஹார நிகழ்ச்சியும் நடக்கிறது. பின்னர் தேரடி வீதியில் முருகன் பெருமான் பத்மா சூரன், அவனது தம்பிகள் இருவரையும் சம்ஹாரம் செய்கிறார். விழா ஏற்பாடுகளை மயிலம் ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !