உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமநாதபுரம் கழுகூரணியில் ஆறுமுக ருத்ராட்ச மரம்!

ராமநாதபுரம் கழுகூரணியில் ஆறுமுக ருத்ராட்ச மரம்!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கழுகூரணியில் ஆறுமுக ருத்ராட்ச மரம் உள்ளது. இதனை ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகள் தரிசிக்கின்றனர். ருத்ராட்ச மரங்கள் பெரும்பாலும் குளிர்ந்த சீதோஷ்ண நிலையில் மலை காடுகளில் மட்டுமே காணப்படும். இத்தகைய ருத்ராட்ச மரம் வெப்பம் மிகுந்த ராமநாதபுரம் பகுதியில் வளர்ந்துள்ளது. இந்த மரம் கழுகூரணி சித்திவிநாயகர் செந்தில்வேலவர் கோயில் அருகே உள்ளது. இவை 6 முகம் கொண்ட ருத்ராட்ச மரம் என்கின்றனர். இந்த மரத்தை அப்பகுதி மக்கள் தெய்வமாக வழிப்படுவதால் ருத்ராட்ச விதையை யாரும் எடுப்பதில்லை. அவை மண்ணில் புதைந்து விடுகின்றன. இந்த மரம் அக்டோபரில் பூத்து காய்க்க துவங்குகிறது. சில பூக்கள் மட்டுமே காய்க்கின்றன. இந்த மரத்தை உள்ளூர் பகுதி மக்கள் மட்டுமின்றி, ராமேஸ்வரம் சுற்றுலா பயணிகளும் தரிசித்துவிட்டு செல்கின்றனர். கோயில் நிர்வாகி ஏ.கதிரேசன் கூறுகையில், "" எனது தாத்தா முத்துச்சாமி 30 ஆண்டுகளுக்கு முன் ருத்ராட்ச கன்றை நட்டார். தொடர்ந்து அதனை பாதுகாத்து வருகிறோம், என்றார். காந்திகிராம பல்கலை உயிரியல் பேராசிரியர் ராமசுப்பு கூறுகையில், ""காடுபோன்று குளிர்ந்த சீதேஷன நிலையை உருவாக்கி ருத்ராட்ச மரத்தை வளர்த்திருப்பர். ஒருசில கோயில்களில் மட்டும் ருத்ராட்ச மரங்கள் உள்ளன. சாதாரணமாக வளர்க்க முடியாது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !