உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாசாணியம்மன் கோவிலில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு

மாசாணியம்மன் கோவிலில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு

ஆனைமலை : ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நேற்று ஆடிவெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் வருகை அதிகரித்தது. ஆனைமலை மாசாணியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஒவ்வொரு அமாவாசை, வெள்ளி, சனி, ஞாயிறு போன்ற நாட்களில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும். நேற்று ஆடிவெள்ளியை முன்னிட்டு வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மாசாணியம்மன் கோவில் உதவி ஆணையர் ரமேஷ் கூறும்போது, கோவில் வழக்கமான நாட்களில் காலை 6.00 மணிக்கு நடை திறக்கப்படும். மாலை 8.00 மணிக்கு நடை மூடப்படும். நேற்று ஆடிவெள்ளியை முன்னிட்டு பத்தாயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் என்றார். கண்காணிப்பாளர் செந்தமிழ்செல்வன் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் ஆடிவெள்ளி பூஜைகளுக்கான ஏற்பாடுகளை கவனித்தனர். உடுமலை: உடுமலையில், ஆடி இரண்டாவது வெள்ளிக்கிழமையையொட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தது. உடுமலை மாரியம்மன் கோவிலில், ஆடி மாத இரண்டாம் வெள்ளிக்கிழமையையொட்டி, பகல் 11.00 மணிக்கு அபிஷேகம், உச்சிகால பூஜை, மாலை 6.00 மணிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற அம்மனுக்கு படையல் இட்டு கூழ் ஊற்றி வழிபட்டனர். உடுமலை நேருவீதி காமாட்சியம்மன் கோவிலில், காலை 9.00 மணிக்கு துர்க்கை அம்மனுக்கு ராகு கால பூஜை, ஜெயதுர்க்கா ஹோமம், 11.00 மணிக்கு அபிஷேகம், 11.30 மணிக்கு ஆராதனை மற்றும் மதியம் 12.00 மணிக்கு பூஜை நிறைவு நிகழ்ச்சி நடந்தது.இன்று அமாவாசை: திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில், ஆடி அமாவாசையையொட்டி, காலை 5.00 மணிக்கு நடை திறப்பு, சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடக்கிறது. அமாவாசையையொட்டி, விவசாயிகள் மாட்டுவண்டிகளுடன் நேற்று மாலையிலிருந்து கோவிலுக்கு சென்றனர். மாரியம்மன் கோவிலில், ஆடி அமாவாசையையொட்டி, காலை 11.00 மணிக்கு அபிஷேகம், உச்சி கால பூஜை, மாலை சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது.உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளிலுள்ள கோவில்களில், ஆடி அமாவாசையொட்டி சிறப்பு பூஜைகள் இன்று நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !