சோலைமலை முருகன் கோயில் திருக்கல்யாணம்
ADDED :3621 days ago
அழகர்கோவில்: கந்தசஷ்டியை முன்னிட்டு, மதுரை சோலைமலை முருகன் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது.இக்கோயிலில் நவ.,12ல் கந்தசஷ்டி விழா துவங்கியது. நேற்றுமுன்தினம் சூரசம்ஹாரம் நடந்தது. நேற்று காலை திருக்கல்யாணம் நடந்தது. காலை 6.30 மணிக்கு சஷ்டி மண்டப மேடையில் வள்ளி, தெய்வானையுடன் சுவாமி எழுந்தருளினார். காலை 11.20 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. பகலில் பாவாடை தரிசனமும், மாலை 5 மணிக்கு ஊஞ்சல் சேவையும் நடந்தது. பட்டர் பாலகணபதி தலைமையில் சடங்குகள் நடந்தன. தக்கார் வெங்கடாஜலம், நிர்வாக அதிகாரி செல்லத்துரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.