திருவெண்ணெய்நல்லூர் முருகன் கோவில்களில் சூரசம்ஹார நிகழ்ச்சி
ADDED :3626 days ago
திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூரில் முருகன் கோவில்களில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவில் வளாகத்திலுள்ள சுப்ரமணியர் கோவிலில் நேற்று முன்தினம், சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. காலை 9:00 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், மதியம் 3:00 மணிக்கு திருவீதியுலாவும் நடந்தது. இரவு 7:00 மணிக்கு சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சியும், இரவு 8:00 மணிக்கு சிறப்பு தீபாராதனையும் நடந்தது. இதேப்போல் திருவெண்ணெய்நல்லூர் வெண்ணெய்வேலவர் கோவிலில் காலை 8:00 மணிக்கு அபிஷேகமும், 8:30 மணிக்கு தீபாராதனையும் நடந்தது. காலை 9:00 மணி முதல் தொடர்ந்து 36 முறை கந்தர் சஷ்டி பாராயணம் செய்யப்பட்டது.