மாலை அணிந்தவர்கள் பெண்களைப் பார்க்கவே கூடாதா?
ADDED :3618 days ago
மாலையணிந்த ஐயப்ப பக்தர்கள் கண்டிப்பாக பிரம்மசரிய விரதம் இருக்க வேண்டும். பெண்களை சகோதரிகளாகவும் தாயாராகவும் நினைக்க வேண்டும். மாயைணிந்தவர்களது வீட்டிலுள்ள பெண்கள் மாதாந்திர உபாதைக்கு உள்ளானால் அவர்கள் தனி அறையில் பக்தரின் பார்வையில் படாதபடி இருப்பது நல்லது. அதற்கு வசதி இல்லாவிட்டால் மாலை அணிந்தவர்கள் உறவினர், நண்பர் வீட்டில் தங்கியிருக்கலாம். அங்கும் தூய்மை கட்டுப்பாடுகள் முக்கியம்.